பதிவு செய்த நாள்
03
ஜன
2020
11:01
காஞ்சிபுரம்:ஆருத்ரா விழாவையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், வரும், 6ம் தேதி முதல், 10ம் தேதி வரை, பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஆருத்ரா விழாவின்போது, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், காஞ்சிபுரம், காந்தி சாலை ஜவுளி வியாபாரிகள், சத்திர தரும பரிபாலன மகமை சங்கம் சார்பில், தினமும், இரவு, 7:00 மணிக்கு, பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்தாண்டு, கும்பகோணம் முருகன் சங்கீத பொம்மலாட்ட சபையினரின், வைகுண்ட ஏகாதசி மகிமை என்ற தலைப்பில், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி, வரும், 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு துவங்குகிறது.ஜன., 7ம் தேதி, வேடன் தேடிய மான்; 8ல் சீதா கல்யாணம்; 9ல், திருமுறை கண்ட சோழன் என்ற தலைப்பிலும், நிறைவு நாளான, 10ம் தேதி, பக்த நந்தனார், ஆருத்ரா மகிமை குறித்து பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக, மாலை, 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.