உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 4.30 மணியளவில் கோ பூஜை நடந்தது. பின்னர் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.15 மணியளவில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ அழகிய ராஜ நாராயண விண்ணகர் பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர்ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயகி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று காலை 7.30 மணியளவில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகளையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை ஒதுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.