காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2020 12:01
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் பெருமாளை வழிபட்டனர்.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் கடந்த 27ஆம் தேதி முதல் மார்கழி மாத பகல்பத்து. இராப்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் நித்திய கல்யாண பெருமாள் சிறப்பு அபிஷேகம்.தீபாராதனை நடக்கும். தினந்தோறும் மாலை பிரபந்த சேவையுடன் மாடவீதி சாமி புறப்பாடு நடந்தது.பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி நாளான அன்று பெருமாள் மோகனா அவதாரத்தில் அருள்பாலித்தார். நேற்று இராப்பத்து உற்சவம் துவங்கியது.முதல் நாளான நேற்று வைகுண்ட ஏகாதசி என்பதால் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் பரமபதவாசல் வழியாக அம்பாளுடன் நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளினார்.பக்தர்கள் கோவிந்தா கோஷம்மிட்டு பெருமாளை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்திய கல்யாண கோவிலில் அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.