செஞ்சி: செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவையை அடுத்துள்ள வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கு மகா சிவராத்திரியன்று (பிப். 21 ம் தேதி) சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர். இதை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள் வழியாக நடந்துவருகிறது வருகிறது. இந்த ஆதியோகி ரதம் நேற்று காலை 9 மணிக்கு செஞ்சிக்கு வருகை தந்தது.