மாணவர்கள் மேம்போக்காக பாடம் படித்தால், மதிப்பெண் குறையும். ஆழ்ந்து படித்தால் எதிர்காலத்தில் உயர முடியும்.
சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூதர் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பார். ""பயனுள்ள நூல்களை கையில் எடுக்கும் போதெல்லாம் பழம் நிறைந்த சோலைக்குள் செல்வதாக நான் நினைக்கிறேன். நல்ல புத்தகங்கள் எனக்கு ஆப்பிள் மரங்களாக தெரிகின்றன. மரத்தை உலுக்கும் போது, பழங்கள் கீழே விழும். அல்லது ஒவ்வொரு கிளையாக உலுக்கிப் பார்க்கலாம். இல்லாவிட்டால் ஒவ்வொரு கொப்பாக உலுக்கலாம் ஆனால் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்த பின் முழுமையாக படிக்காமல் விட மாட்டேன்” என்கிறார். அவரைப் போல ஆழ்ந்து படித்தால் நல்ல மதிப்பெண் பெறுவது உறுதி.