திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த பிப்ரவரி 24 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிறப்புப் பூஜைகளுக்குப் பின் காலை சரியாக 8.00 மணிக்கு சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வரும் தேர் மாலையில் நிலையை அடையும்.