சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2026 11:03
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 9 மணி அளவில் மூலவரூக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து ராதை கிருஷ்ணர் அலங்காரம் செய்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதணை நடந்தது. வழிபாடுகளை முரளி சர்மா செய்து வைத்தார். ஆர்ய வைசியா சமூக மக்கள் அனைவரும் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.