சபரிமலை: சபரிமலை முன்பதிவு மற்றும் விபரங்களை தெரிந்து கொள்ள sabarimala.kerala.gov.in என்ற இணையதளத்தை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். மலையாளம், தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த வெப்சைட்டை பார்க்க முடியும். தரிசனத்திற்கு முன்பதிவு, சன்னிதானத்தில் பூஜை, அறைகள் முன்பதிவு போன்றவை இதன் மூலம் செய்ய முடியும். வழிபாடு கட்டணம், போக்குவரத்துவசதி, தொடர்பு போன் எண்கள், போட்டோ, வீடியோ கேலரி போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.