திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி அமைக்கப்படும் இரும்பு வேலி பணி முழுமை பெறாமல் உள்ளது. திருக்கோஷ்டியூர் தெப்பக்குளத்தில் மாசி தெப்ப உற்ஸவத்தின் போது பெண்கள் குளத்தைச் சுற்றி தீபம் ஏற்றி வழிபடுவர். குளத்திற்குள் விழுந்து விடாமல் இருக்க பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதுகாப்பு வேலி தற்காலிகமாக அமைக்கப்படும்.
தற்போது நிரந்தரமாக இரும்பு வேலி குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எட்டு அடி உயரத்தில் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது 50 சதவீத பணி நடந்துள்ளது. கிழக்குக் கரையில் 420 அடியும், தெற்குக் கரையில் 640 அடி நீளத்திற்கும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. உபயதாரர்களின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு வரும் இந்த பணி தற்போது நிதிப்பற்றாக்குறையால் முழுமை பெறாமல் உள்ளது. அடுத்து மாசியில் தெப்ப உற்ஸவம் நடைபெற உள்ளது. தெப்பத்திற்கு முன் இப்பணியை நிறைவு செய்ய உதவ விரும்பும் உபயதாரர்கள்கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.