பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமர்ச்சையாக நடந்தது. இந்த விழாவில ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி அன்னசாகரம் தண்டுபாதை தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பயம், புண்யாகவாஜனை, பஞ்ச கவ்யம், ÷ஷாடச கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகார்சனம் முதல் கால யாக பூஜை, திரவியாஹிதி, பூர்ணாஹிதி, தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் ஆச்சார்ய வர்ணம், சிவாகச்சார்ய ஊர்வலம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹிதி, பூர்ணாஹிதி, தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் மூன்றாம் கால யாக பூஜை, திரவியாஹிதி, மஹா பூர்ணாஹிதி, மஹா தீபாரதனை, ÷ஷாட்ச உபசார பூஜை நடந்தது. இரவு 10.30 மணிக்கு திரவுபதியம்மன் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று 25ம் தேதி அதிகாலை நான்காம் கால யாக பூஜையும், ஸ்பரிஷாஹிதி, நாடி சந்தானமும், யாத்ராதானம், திருக்கடம் புறப்பாடு, விநாதயகர், திரவுபதியம்மன், போத்தராஜா, நவக்கிரகம், தருமர், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், குந்திதேவி, அல்லி, சங்கோதியம்மன், அல்லிமுத்து, அபிமன்யு, பரிஷித், பஞ்சாங்க பிராமணர் நடந்தது.காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் குருக்கள் கிருபாகரன் மற்றும் சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து மஹா அபிஷேகமும், மஹா தீபாரதனை நடந்தது. 11 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருக்கல்யாணம் ஊர்வலம் நடந்தது. சுற்றுவட்டார ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஏப்., 26) பால் குடும் எடுத்தல், மஹா அபிஷேகம், ராஜ அலங்காரம், லலிதா சஹஸ்ர நாம பாராயணம், தச தரிசனம், தச தானம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் பூக்கடை ரவி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.