பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை தரிசனம் செய்வர். இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி திதி, நேற்று அதிகாலை, 1:49 மணி முதல், இன்று அதிகாலை, 12:22 வரை உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், மார்கழி மாத பவுர்ணமி என்பதாலும், கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்ததாலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.