பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் தேர்த்திருவிழாவில், தீ மிதிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக விநாயகர் மற்றும் அம்மன் தேர், பாரியூர் ராஜகோபுரம் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இரு தேர்களையும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், நேற்று மாலை 4:00 மணிக்கு, வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பாரியூர் பஸ் நிறுத்தம் வழியாக, இரு தேர்களும் சென்று, ஈஸ்வரன் கோவிலை அடைந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு தேர் நிலை சேரும் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.