பதிவு செய்த நாள்
12
ஜன
2020
04:01
காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவிலில், திருத்தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் தரிசனம் செய்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு, திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார்.
அவரை, அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.பின் அம்மையார் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தர்மபுரம் பகுதியில் உள்ள யாழ்மூரிநாதர் கோவில் மற்றும் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் தர்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் மற்றும் சனீஸ்வரர் சன்னதிகளில் நடந்த சிறப்பு பூஜையில் ஆதினம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.