பதிவு செய்த நாள்
13
ஜன
2020
10:01
காஞ்சிபுரம்: வேடன் வடிவில், வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கும் அனுஷ்டான உற்சவம், வரும், 18ம் தேதி, செவிலிமேட்டில், விமரிசையாக நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. வரதராஜ பெருமாள் அருள்பாலித்த இடத்தில், ராமானுஜருக்கு, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.ராமானுஜர் குளித்த கிணறு, கோவில் அருகே உள்ளது. இக்கிணறு, சாலை கிணறு என அழைக்கப்படுகிறது.இந்த அனுஷ்டான குளத்திலிருந்து, வரதராஜ பெருமாள் கோவில் அபிஷேகத்திற்கு, அன்றாடம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம், அனுஷ்டான உற்சவம், இக்கோவிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டு, ஜனவரி, 18ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, வேடன் அலங்காரத்தில் கோவில் இருந்து புறப்படும் வரதராஜ பெருமாள், ராமானுஜர் கோவிலுக்கு வருவார். அங்கு சிறப்பு அபிஷேகங்களை முடித்து, கோவிலுக்கு திரும்புவார். அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.