பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
சபரிமலை : சபரிமலையில், மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்கள், பந்தளத்தில் இருந்து நேற்று புறப்பட்டன. நாளை மாலை, 6:30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.
பந்தளம் அரண்மனையில் வளர்ந்தவர் அய்யப்பன். அவர் சபரிமலை சென்ற பின், அவரை காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார். அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பந்தளத்தில் இருந்து ஆபரணங்கள் சபரிமலை வரும்.நேற்று பகல், 1:00 மணிக்கு, அரண்மனையில் இருந்து, திரு ஆபரண பவனி புறப்பட்டது. பவனி, நாளை மாலை, 6:25 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும். சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை மகர விளக்கு பெருவிழா, பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.மகரவிளக்கு நாளில் பந்தளம் அரண்மனையின் ஆபரணங்கள், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இளையராஜாவுக்கு விருதுகேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து, ஆண்டு தோறும், ஹரிவராசனம் விருது வழங்குகின்றன. அய்யப்பன் பாடல்களை பாடியவர்கள், இசை அமைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.நடப்பு, 2020ம் ஆண்டு விருதுக்கு, இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை காலை, 9:00 மணிக்கு சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடக்கும் விழாவில், மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இந்த விருதை இளையராஜாவுக்கு வழங்குகிறார்.