Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி விழா ... சூடி கொடுத்த சுடர் கொடிக்கு ஏழுமலையான் மாலை சூடி கொடுத்த சுடர் கொடிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பின் கல்ஹாரி தீர்த்தத்தில் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
10:01

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின், கல்ஹாரி தீர்த்தத்தில் இருந்து, கோவில் அர்ச்சகர்கள் தண்ணீர் கொண்டு சென்று மூலவருக்கு பூஜை நடத்தும் பணி, நேற்று முன்தினம் முதல் துவங்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவில் மூலவருக்கு காலசந்தி, உச்சி காலம் மற்றும் சாய்ரட்சை போன்ற மூன்று சிறப்பு பூஜைகள் தினமும் நடத்தப்படுகின்றன.இந்த பூஜைக்கு, மலைக்கோவில் அருகில் உள்ள கல்ஹாரி தீர்த்தம் என்கிற இந்திர தீர்த்த குளத்தில் இருந்து, தண்ணீர் கொண்டு சென்று பூஜை செய்து புராதன காலமாக வழிபட்டு வந்தனர்.இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் இந்திர தீர்த்தத்தை முறையாக பராமரிப்பு மற்றும் போதிய மழைநீர் வரத்து இல்லாததால், குளத்தில் தண்ணீர் மாசுப்பட்டதை தொடர்ந்து, பூஜைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, மலைக்கோவிலுக்கு, பைப் லைன் மூலம் தண்ணீரைகொண்டு சென்று, மூன்று காலை பூஜை செய்தனர்.
இந்நிலையில், ஒரு ஆண்டாக, திருத்தணி முருகன் திருவடி சபையினர், கோவில் நிர்வாகம் ஒப்புதலுடன், கல்ஹாரி தீர்த்தகுளத்தை சீரமைத்தும், குளத்தை சுற்றி மாசுப்படாத வண்ணம் கம்பி வலைகள் போட்டு பத்திரப்படுத்தினர்.மேலும், கல்ஹாரி தீர்த்த குளத்திற்கு, யாரும் நுழையாத வண்ணம் சுற்றுச்சுவர் மற்றும் வாசற்கதவு ஏற்படுத்தி மழை நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்தி தண்ணீரை துாய்மையாக பராமரித்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் தை மாதம் முதல் நாள் பொங்கல் தினத்தன்று, 30 ஆண்டுகளுக்கு பின், கோவில் நிர்வாகம் உத்தரவு பெற்று, கோவில் அர்ச்சகர்கள் கல்ஹாரி தீர்த்தத்தில் இருந்து, தண்ணீர் கொண்டு சென்று, மூலவருக்கு சிறப்பு நடக்கும் வழக்கம் துவங்கியது. இனிவரும் நாட்களில், பூஜைக்கு கல்ஹாரி தீர்த்தம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar