விழுப்புரம்: சாலாமேடு அஷ்டவராகி கோவிலில் சித்திரையையொட்டி மகாவராகி ஹோமம் நடந்தது.விழுப்புரம் அடுத்த சாலாமேடு அஷ்டவராகி கோவிலில் சித்திரை மாத வெயில் தாக்கத்தை தணிக்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று முன்தினம் நடந்தது. காலை 9 மணிக்கு துவங்கி பகல் 12 மணி வரை வராகி தேவிக்கு குளிர்ந்த மூலிகைகளால் ஹோமங்கள் நடந்தது.தொடர்ந்து இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை 32 விதமான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையொட்டி வராகியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.