நாசரேத்: நாசரேத் அருகே பிள்ளையன்மனை அகிலாண்டேஸ்வரி கோயில் அறக்கட்டளை சார்பில் லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. விழாவினையொட்டி காலையில் கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் வீதி உலா வந்தனர். தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி கோயில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு லட்சார்ச்சனையும், புஷ்பாஞ்சலியும் துவங்கியது. விசிறி சங்கர் லட்சார்ச்சனையை துவக்கிவைத்தார். தொடர்ந்து அம்பாள் மற்றும் நவக்கிரக சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.புஷ்பாஞ்சலி பிரசாத பைகளும் விநியோகிக்கப்பட்டன. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், மாணிக்க வாசகம், அகிலன், முத்துக்குமரன் ஆகியோரும், பெண்கள் பஜனைக்குழு சார்பாக சங்கரி, முத்துலெட்சுமி ஆகியோரும் செய்திருந்தனர்.