கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. நேற்று முதல் மே 8ம் தேதி வரை உற்சவங்கள் நடக்கின்றது. நேற்று காலை சுப்ரபாத சேவை, கோ பூஜை. விஸ்வ ரூப தரிசனத்திற்கு பின் அதிகாலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.27ம் தேதி இரவு முதல் மே 4ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடக்கிறது. மே 1ம் தேதி கருட சேவையும், 3ம் தேதி பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், 5ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடக்கிறது.