பதிவு செய்த நாள்
30
ஜன
2020
11:01
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள, அத்தாணி, குப்பாண்டபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. பொன்னாச்சியம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், குண்டம் திருவிழா நடக்கும். அந்த வகையில் கடந்த, 16 ல், பூச்சாட்டுதல், 22ல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், முக்கிய நிகழ்வான நேற்று காலை குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டு, பொங்கல் வைக்கப்பட்டது. மதியம், பக்தர்கள் தயார்நிலையில் கையில் பிரம்பு மற்றும் வேப்பிலை ஏந்தியபடியும், ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் வரிசையாக குண்டம் இறங்கினர். விழாவிற்கு அந்தியூர், அத்தாணி, குப்பாண்டபாளையம், கரட்டூர் மேடு, கருப்பணகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். வரும், 7 ல், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.