பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
காஞ்சிபுரம் : உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோவிலில், திருஊரகம், திருகாரகம், திருபாடகம், திருநீரகம் ஆகிய, நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட தலமாகும்.இக்கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, 7:35 மணிக்கு. கொடியேற்றத்துடன் துவங்கியது.முதன் நாள், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன், சப்பர வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.நாளை காலை, பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருள்வார்.