பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நடைபெறும் உற்சவங்களில் முக்கியமானது தை பிரம்மோற்சவம்.இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, கடந்த, 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த, 10 நாட்களாக தினமும், காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில், பெருமாள் பல்வேறு அலங்காரங்களில், திருவீதி உலா வந்தார்.நேற்று காலை, பெருமாள், திருமஞ்சனம்; மதியம், த்வாதச ஆராதனம்; இரவு, வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது.இரவு, 10:30 மணிக்கு, கொடியிறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இன்று முதல் விடையாற்றி உற்சவம், மூன்று நாட்கள் நடைபெறுகிறது.