பதிவு செய்த நாள்
31
ஜன
2020
12:01
உத்திரமேரூர் : நெய்யாடுபாக்கம் வரசக்தி விநாயகர் மற்றும் உஞ்சியம்மன் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் கிராமத்தில், பழமையான வரசக்தி விநாயகர் மற்றும் உஞ்சியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, உபயதாரர்கள் மற்றும் கிராமவாசிகள் சார்பில், திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, 28ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன், யாகசாலை பூஜை துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை, 7:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, வரசக்தி விநாயகர், உஞ்சியம்மன், -பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி, விநாயகர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.