பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
கோவை :மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, நாளை துவங்கி, பிப்., 11ல் நிறைவடைகிறது; பிப்., 8ல் தேரோட்டம் நடக்கிறது.
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான இத்திருவிழா, நாளை இரவு, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. நாளை மறுநாள், காலை, 7:00 மணிக்கு, விழாக் கொடியேற்றப்படுகிறது. 9:00 மணிக்கு, யாசசாலை பூஜையும், மாலை, 4:00 மணிக்கு, அபிஷேகம், சிறப்பு பூஜையும் நடக்கிறது. பிப்., 8 ம் தேதி, காலை, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, 11:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் முதல் பிப்., 11 ம்தேதி வரை, தினமும் காலை முதல் சுப்ரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையும், மாலையில், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட, கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.