தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷகேம்: 10 லட்சம் பக்தர்கள் வருவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2020 01:01
தஞ்சை: தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது: கும்பாபிஷேகத்தையொட்டி, 11 ஆயிரத்து, 900 சதுர அடி பரப்பில், யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 110 யாக குண்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பூஜையில், 400க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்கவுள்ளனர். போக்குவரத்து, குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் வசதிகள் விரிவாக மேற்கொள்ளப்படும். மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், 10 லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.