புதுச்சேரி: சண்முகாபுரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி சண்முகாபுரத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பூர்வாங்க பூஜை கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:15 மணிக்கு முத்தாலம்மன் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.9:30 மணிக்கு பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.