ருக்மணி சத்யபாமா கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2020 12:02
கிருஷ்ணகிரி: ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில், சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோவிலில் கும்பாபி ?ஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த, 28 காலை, 6:00 மணிக்கு ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து, கரிகோல நிகழ்ச்சி நடந்தது. 29ல் கணபதி பூஜை, நேற்று காலை, 6:00 மணிக்கு சுப்ரபாதம், ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ண சுவாமி மூல மந்திர ஹோமம், 9:15 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. 5:30 மணிக்கு ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ண சுவாமி திருக்கல்யாண உற்சவம் மற்றும் உற்சவ பெருமாளுக்கு ஆராதனை ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.