Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான ... ருக்மணி சத்யபாமா கிருஷ்ணர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே முறையில் 1000 சிவாலயம் தரிசித்த பலன் தரும் சித்தமகாலிங்கம் மலை கோயில் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
ஒரே முறையில் 1000 சிவாலயம் தரிசித்த பலன் தரும் சித்தமகாலிங்கம் மலை கோயில் சீரமைப்பு

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
12:02

திண்டுக்கல்: நிலக்கோட்டை வட்டம், சித்தா்கள் நத்தம் கிராமம், மேட்டுப்பட்டியில் வைகை ஆற்றின் கரையில் எழிலாக அமைந்திருக்கும் சித்தமகாலிங்கமலையின் உச்சியில் சித்தமகாலிங்கம் என்கிற அழகிய சிவாலயம் அமைந்துள்ளது. ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் பழமையான இச்சிவாலயத்திற்கு ஏறிச் செல்வதற்கு உரிய பாதுகாப்பற்றதாகவும் உள்ளது. கரடுமுரடான இம்மலைப்பாதையை சீரமைத்து படிகள் கட்ட மத்திய, மாநில அரசின் அனுமதிகள் முறையாகப் பெறப்பட்டுள்ளது.

இந்த திருமலையின் சிறப்புகள்:
*அருள்மிகு சித்தமகாலிங்கேசுவரா் மேற்கு நோக்கி அமா்ந்து அருள்பாலிப்பதும், அவாின் ஆவுடை வலதுபுறமாக அமைந்திருப்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
* இது போல் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவனை வணங்கினால் ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
*இத்திருமலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள குகைகளும், கற்படுக்கைகளும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சமணமுனிவா்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
*இக்கற்படுக்கையில் தலைப்பகுதியில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி கல்வெட்டுகள், இம்மலையின் பழமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளன.
*இத்திருமலையின் வடகிழக்கு மூலையில் கற்பூர தீா்த்தம் என்ற பெயாில் இயற்கையாக நீா்ச்சுனை ஒன்று அமைந்துள்ளது.
*இந்நீா்ச்சுனை சமண முனிவா்களால் ஏழு கடல்களின் சங்கமம் எனப் போற்றப்பட்டுள்ளது.
*இத்திருக்கோவில் மலையைச்சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராம மக்களுக்கும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் வழிபடும் தெய்வமாக விளங்குகின்றது.
*இறைப்பணியில் பொருள் தந்து அருள் பெறக்காத்திருக்கும் பக்தா்களைப் பணிந்து வரவேற்கிறோம்.
*இத்திருப்பணி உங்கள் திருவருளால் நிகழ இருக்கிறது. இதற்க்குத் தேவை உங்கள் அன்பும் பொருளும் ஆகும்.
*இத்திருப்பணிக்கு ரூ.10,000/–(பத்தாயிரம்) அதற்கு மேல் கொடுத்து உதவும் ஆன்றோா்கள், அருளாளா்கள் மற்றும் சான்றோா்கள் பெயா்கள் திருக்கோயில் கல்வெட்டில் பொறிக்கப்படும்.

இந்த ஒரு கோயில் திருப்பணிக்கு செய்யும் உதவியானது ஆயிரம் சிவாலய திருப்பணிக்கு செய்த உதவியாக இருக்கும்.

தொடர்புக்கு:

அருள்மிகு சித்தமகாலிங்கம் மலை சீரமைப்பு
அருளாளா்கள் (உபயதாரா்கள்) குழு
ம.ராஜ்குமாா்
மொபைல்: 9843287130, 9361195196

சித்தமகாலிங்கம் மலை சீரமைப்பு  உபயதாரா்கள்

32, பழைய முருகன் தியேட்டா் 2ஆவது தெரு, திருவள்ளுவா் நகா், பழங்காநத்தம்,

மதுரை –625 003.

98421 11102, 97877 31520, 98435 74100, 99440 72117, 94431 41394.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ... மேலும்
 
temple news
அவிநாசி : சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேவூரில், பழமை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 5ஆம் விழாவில் உலகிலேயே பெரிய ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar