பதிவு செய்த நாள்
03
பிப்
2020
11:02
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதஸப்தமியை யொட்டி, மகோற்சவம் நடந்தது.விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதஸப்தமியை யொட்டி மகோற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 6.00 மணிக்கு, சூரியபிரபை, 9.00 மணிக்கு அனுமந்த வாகனம், 10.30க்கு சஷே வாகனம் பூஜைகள் நடைபெற்றது.பின், பகல் 12.30 மணிக்கு, கருட வாகனத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.00 மணிக்கு, இந்திர விமானம், 5.30க்கு கற்பக விருட்ஷம், இரவு 7.00 மணிக்கு சந்திரபிரபை பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்