மதுரை, பிப், 4 – மதுரை மேலக்கால் மெயின் ரோடு கோச்சடை மயில்வேல் முருகன் கோயில் வருடாபிஷேகம் நாளை நடக்கிறது. காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9:30 மணிக்கு கலச புறப்பாடு, காலை 10:00 மணிக்கு வருடாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பகல் 12:15 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு சண்முகாா்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் நடக்கிறது. ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்து வருகின்றனா்.