முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் அய்யனார், சிவகாளி அம்மன், கருங்காளி அம்மன், கருப்பணசுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. பிப்.4 காலை 10.00 மணிக்கு மஹாகணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், கடல் தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று கோமாதா பூஜையுடன் கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது. சிவகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.பின் அன்னதானம் நடந்தது.