பதிவு செய்த நாள்
06
பிப்
2020
10:02
தேவதானப்பட்டி, :தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோயிலில் அமைந்துள்ள காசி லிங்கேஸ்வரர், அக்னி வீரபத்திரர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பூரண கும்ப பூஜை, யாகசாலை பிரவேசித்தல், கணபதி பூஜை, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் விக்னேஷ்வர பூஜை, சதுர்வேத பாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.நான்காம் கால யாக பூஜைகள் ,சதுர்வேத பாராயணம், ரக்ஷாபந்தனம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்து யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சங்கர சுப்பிரமணியன் சிவாச்சாரியார் அதனை நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் ஆலய வழி பூஜாரிகள் செய்திருந்தனர்.ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் கணபதி ஹோமம், நவசக்தி, நவக்கிரக ஹோமம், முதல்கால யாக பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் 2-ம் கால பூஜை, வேத பாராயணம், மஹா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம், அர்ச்சனை வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள் வெங்கட்ராமன், முனுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஊராட்சி தலைவர் வேல்மணி, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் மீரா, ஊர் பிரமுகர்கள் வாசுதேவன், சுப்பையா உட்பட பலர் செய்திருந்தனர்.