மானாமதுரை:மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இக்கோயிலில் விநாயகர், முருகன், ராமலிங்கசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிப்.,3ல் யாகசாலையுடன் பூஜைகள் துவங்கியது. பிப்.,4ல் இரண்டு, 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர் ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கட்டிக்குளம் (நாடு) கிராம மக்கள் செய்திருந்தனர். சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.