பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
ஆட்டையாம்பட்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, ராட்சத ராட்டினங்கள் தயார்படுத்தும் பணி நடக்கிறது.
சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திருவிழா, கொடியேற்றத்துடன், நேற்று முன்தினம் தொடங்கியது. வரும், 11 வரை நடக்கவுள்ள திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்பர். அவர்களுக்கு, கோவிலைச் சுற்றி, 100க்கும் மேற்பட்ட கரும்புச்சாறு, அப்பளகடை உள்ளிட்ட தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், கோவில் எதிரே, ராட்சத ரங்கராட்டினம், டோரா டோரா, கொலம்பஸ், குட்டி ரயில் உள்ளிட்ட சிறுவர்களை கவரும் வகையில், கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு, ஏற்பாடு நடக்கிறது. அப்பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாரம்பரிய மாட்டுச் சந்தையும் நடக்கவுள்ளது.