பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
செஞ்சி : மேல்எடையாளம் கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. செஞ்சி அடுத்த மேல்அடையாளம் கிராமத்தில் பழமை வாய்ந்த கருமாரியம்மன், பூவாத்தம்மன் கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் கட்டியுள்ளனர். திருப்பணி முடிந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.அதனையொட்டி, கடந்த 3ம் தேதி கரிகோல ஊர்வலம் நடந்தது. 4ம் தேதி காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் எடுத்து வருதல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, கும்ப அலங்காரம் நடந்தது.இன்று 6ம் தேதி காலை 8:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. நாளை 7ம் தேதி காலை 6:30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 8.45 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:15 மணிக்கு பூவாத்தம்மன், பரிவார தெய்வங்களுக்கும், 9:45 மணிக்கு கருமாரியம்மன், ராஜகோபுரத்திற்கும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.