தியாகதுருகம்: தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. தியாகதுருகத்தில் நுாற்றாண்டு பழமையான சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை செப்பனிட்டு புதுப்பிக்க பக்தர்கள் முடிவு செய்து கடந்த ஆண்டு திருப்பணி துவங்கியது.அதனைத் தொடர்ந்து கோவில் விமானம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம், விநாயகர், நவகிரக சன்னதி, கொடிமரம் ஆகியவை 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 7ம் தேதி நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி நடந்து வருகிறது.நாளை 7ம் தேதி காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.