கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி ஸ்ரீராமர் கோவிலில், 22 ஆம் ஆண்டு விழா துவங்கியது.நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு பள்ளி உணர்த்தல், தொடர்ந்து கணபதி ஹோமம்; 6:30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலை, 6:30 மணிக்கு தாலப்பொலியுடன், செண்டை மேளம் இசைக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீராமர் திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. பாலம், பகவதி அம்மன் கோவில், தொரப்பள்ளி வனக் சோதனைச் சாவடி வரை சென்று, கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.