ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில், வேண்டுதலை நிறைவேற்ற பாதயாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபட்டனர். பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு வேண் டியவரம் தரும் முருகன், குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார். இவரை மிட்டாய் வைத்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல் கின்றனர்.
குவிந்த பக்தர்கள்: நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை வேலப்பரை பக்தர்கள் வழிபட்டனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மருத்துவ சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது.