பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
ஊத்துக்கோட்டை : காரணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.
சுருட்டப்பள்ளி அருகே, காரணி கிராமத்தில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன், திருப்பணிகள் நடந்து முடிந்தன.இதையடுத்து, 5ம் தேதி, பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 6:00 மணிக்கு கலசபூஜை, மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு பின், காலை, 8:30 மணிக்கு, விமான கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதேபோல், பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட, ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமம், நாட்நாச்சியம்மன் கோவிலிலும், கும்பாபிஷேகம் நடந்தது.