பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
மேல்நல்லாத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சி, மதுராபட்டரை எல்லையம்மன் கோவிலில், முதலாமாண்டு வருஷாபிஷேக விழா, நேற்று நடைபெற்றது.
நேற்று காலை, 9:00 மணிக்கு மங்கள இசையும், காலை 9:15 மணிக்கு விக்னேஷ்வரா பூஜையும், காலை, 10:15 மணிக்கு மூலமந்திர ஹோமமும் நடந்தது.தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், எல்லையம்மனுக்கு நவகலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, ஊர் கூடி பொங்கல் வைத்தலும், இரவு, 7:30 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், எல்லையம்மன் திருவீதி உலா புறப்பாடும் நடந்தது.இதில், மேல்நல்லாத்துார் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.