திருப்புல்லாணி:-திருப்புல்லாணியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.6ல் முதல் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. அனுக்ஞை, கும்ப பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுக்கு பின் நேற்று காலை 8:00 மணிக்கு ரகுபதி அய்யங்கார்தலைமையில் கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.மூலவர் பாண்டி முனீஸ்வரருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் காணப்பட்டார். ஓதுவார் அரியமுத்து திருவாசகம் பாடினார்.அன்னதானம் நடந்தது. கோயில் டிரஸ்ட்டி சேதுராணி, ராமசாமி, விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.