பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.
ராமநாதபுரம் சாமிநாத சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைநடந்தது. வழிவிடு முருகன் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வினை தீர்த்த வேலவர்கோயில், மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி ஆகிய இடங்களில்சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
* பொன்குளம் விக்னேஷ்வர பாலசுப்பிரமணியசுவாமி அறக்கட்டளைக்குட்பட்ட கோயிலில்சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.
* ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட நொச்சிவயல் ஊரணி மேல்கரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர்கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. விழாவில் சாதுக்களுக்கும். சாமியார்களுக்கும் காவி வஸ்திரம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
*அபிராமம் அருகே மேலக்கொடுமலுாரில் முருகன் கோயிலில் பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் உட்பட 21 வகையான அபிேஷகங்கள், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், நடத்தபட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம், எடுத்து காணிக்கை செலுத்தி, தரிசனம் செய்தனர்.
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, ஆந்தகுடி முருகன்கோயில்களில் தை பூசத்தை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றபல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு முருகன் பக்திபாடல்களைபாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேதலோடைபெரிய ஊரணியில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், மயில், ரதம் உள்ளிட்ட காவடிகளை சுமந்தவாறும், அலகு குத்தியபடியும் கோயிலுக்கு வந்தனர். பக்தர்களின் பாலாபிஷேகத்திற்கு பின்னர் சர்வ அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். பெண்கள் நெய் விளக்கு, மாவிலக்கு ஏற்றி பொங்கலிட்டனர். இன்று பகலில் இடும்பன் பூஜையை முன்னிட்டு அசைவ படையல் நடக்கிறது.
முதுகுளத்துார் காந்திசிலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு பால்,சந்தனம்,பன்னீர் உட்பட 21 வகையாக அபிேஷகங்கள்,சிறப்புபூஜைகள் நடந்தது.பின்பு முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிேஷங்கள் நடந்தது.
தேவிபட்டினம்அழகன்குளம் நாடார்வலசை செல்வகணபதி, பாலமுருகன் கோயில் தை பூச விழாவில் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், காவடி ஆகியவைகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து அபிேஷகம் செய்து வழிபட்டனர்.