குன்றக்குடியில் தைப்பூச விழா காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2020 04:02
காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில், தைப்பூசவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகனின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும்தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.குன்றக்குடி தைப்பூசவிழா ஜன.30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம்தைப்பூச தேரோட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் குன்றக்குடிக்கு பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று காலை தைப்பூசவிழாவையொட்டி மயூரகிரி புஷ்பகரணியில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதபெருமான் வீதிஉலா வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன்செலுத்தினர்.