பதிவு செய்த நாள்
09
பிப்
2020
03:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தைப்பூச தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரையுள்ள மாதங்களில், ஆறு மற்றும் குளங்களில், ஒவ்வொரு மாதமும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, தை மாத பூச நட்சத்திரத்தில் நடக்கும் ஈசான்ய குள தீர்த்தவாரி நேற்று நடந்தது. ஈசான்ய குளத்தில் சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், குளத்தில் மூழ்கி நண்பகல், 12:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, தீர்த்தவாரி முடிந்த நிலையில், வள்ளாள மஹாராஜா, போரில் இறந்த செய்தி அருணாசலேஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சியும், இதைக்கேட்டு, மேள தாளம் இல்லாமல், குளக்கரையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.