பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
ராமேஸ்வரம்:தைபூச விழா யொட்டி ராமேஸ்வரம் உபகோயில் தீர்த்த குளத்தில் சுவாமி, அம்மன் தெப்ப தேர் வலம் வந்தது.
தைபூச விழா யொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகியதும், கோயில் நடைசாத்தினர்.பின் உபகோயில் லெட்சுமணேசுவரர் கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை நடந்தது. இங்குள்ள தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து வலம் வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், உட்பட பலர் பங்கேற்றனர்.