குஜராத் சோமநாத் ஜோதிர்லிங்கத்திற்கு ரவிசங்கர் தலைமையில் ருத்ர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2026 12:01
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மகா ருத்ர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலம் சோமநாதர் கோயிலில் அந்நியர்கள் படையெடுப்பால் இக்கோயில் துாண்கள், சிற்பங்கள் சேதமடைந்தன. அப்போது இக்கோயில் குருக்கள் சிவலிங்கத்தை எடுத்து ரகசியமாக பாதுகாத்து வைத்தனர். இந்த சிவலிங்கத்தை சமீபத்தில் வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சோமநாதர் ஜோதிர்லிங்கத்தை கோயில் குருக்களிடம் கொடுத்து சிறப்பு பூஜை செய்து பெற்றார். பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று தரிசனம் செய்தார். மாலை 6:05 மணிக்கு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு அவர் வந்தார். வெள்ளியில் வடிவமைத்த நாகாபரணத்தின் கீழ் ஜோதிர்லிங்கம் வைக்கப்பட்டு புரோகிதர்கள் மகா ருத்ர பூஜைகளை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இப்பூஜைகளுக்கு பின் ஜோதிர்லிங்கத்தை இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்து, இறுதியாக குஜராத் சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்