நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமிக்கு தைல காப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2026 12:01
நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில் ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி மூலவர் சிலை அத்தி மரத்தாலானது. இதனால் மூலவருக்கு எவ்வித அபிஷேகமும் செய்வதில்லை. மூலவர் சிலை வீணாகாமல் இருக்க தைல காப்பு மட்டும் செய்வது வழக்கம். பல்வேறு காரணங்களால் கடந்த 50 ஆண்டுகளாக தைலகாப்பு செய்யவில்லை. இதனால் சிலை சேதமாகும் வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் சேர்ந்து தைலகாப்பு செய்ய முடிவு செய்தனர். அதற்காக நேற்று முன்தினம் முதல் யாகசசாலை பூஜைகள் நடந்தன. நேற்று பூர்ணாஹீதி, தீபாராதனை முடிந்து மூலவருக்கு தைலகாப்பு செய்தனர். இதை கண்ட பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் காண கிடைக்காத காட்சி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ரமேஷ் பட்டாச்சாரியார் தலைமையில் பூஜைகள் செய்தனர்.