கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை வழிபாடு செய்யும் நோக்கில், சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வடலூர் ஞானசபை, மற்றும் தருமச்சாலைக்கு நேற்று மதியம் வந்தனர், அங்கு அவர்களுக்கு நிர்வாக அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்கு வள்ளலார் கொள்கை, செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. அவர்கள் ஞான சபை வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.