காளாத்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 8 மாசிமக தேரோட்டம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2020 10:02
உத்தமபாளையம் :உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 8 ல் மாசிமக தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் முல்லையாற்றங்கரையில் அமைந்துள்ளது. புராதானமானதும், பிரசித்திபெற்றதுமான இந்த கோயில், ராகுகேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.இங்கு மாசித்தேரோட்டம் 80 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஊர் பொதுமக்களின் முயற்சியால்மீண்டும் நடைபெறத்துவங்கியுள்ளது. கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேரோட்டத்தை இந்தாண்டு நடத்த வேண்டாம் என்று ஒரு சிலர்தெரிவித்தனர்.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் செயல் அலுவலர் போத்திசெல்வி தலைமையில் நடந்தது. அனைத்து சமுதாய நிர்வாகிகள் பங்கேற்றனர். இருதரப்புஆலோசனைகளை கேட்ட, செயல்அலுவலர், இந்தாண்டு தேரோட்டம் நடத்தாவிட்டால், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போய்விடும். எனவே தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்படுகிறது. பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 8 ல் தேரோட்டம் நடத்தப்படும், என அறிவித்தார்.