பதிவு செய்த நாள்
11
பிப்
2020
11:02
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை துவக்குவது குறித்து, வரும், 19ல் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 15 பேர் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுமானம், அதை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.
19-ல் முதல் கூட்டம்: இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம், டில்லியில், வரும், 19ல் நடக்க உள்ளது. அதில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை எப்போது துவக்குவது என்பது குறிதது விவாதித்து முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும், ஏப்ரல் முதல் வாரத்தில் ராம நவமி வருவதால், அப்போது, கட்டுமானப் பணி துவக்கப்படலாம் என, கூறப்படுகிறது.